ராகுல் என் சகோதரர்: ஸ்டாலின் உரிமையுடன் வைத்த கோரிக்கை என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசியக் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
காலை சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாலை சேலத்தில் நடைபெறுகிற பிரம்மாண்ட பேரணியில் ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் கலந்து கொள்கின்றனர். அதில் பேசிய ஸ்டாலின், “பாஜக தமிழகத்திற்கு எந்தவொரு உதவியும் செய்யவில்லை. தமிழக அரசு கேட்ட எந்தவொரு நிதியுதவியையும் மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை.
அதிமுக அரசு பாஜகவுக்கு அடிமையாக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவை மிரட்டி அதன் நிழலில் வலர பாஜக முயற்சிக்கிறது. அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் ராகுல் காந்தி சகோதரர் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்லுவாற். அவருக்கு உரிமை கலந்த கோரிக்கை ஒன்றை வைக்கிறேன். தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி ஒன்றிணைந்ததால் தான் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதே மாதிரியான கூட்டணி தேசிய அளவில் அமையவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 37% வாக்குகளை மட்டுமே பெற்று பாஜக பெற்றுள்ளது. 63% வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு மத்தியில் பிரிந்துள்ளன.
எனவே தேசிய அளவில் தமிழகம் போன்ற கூட்டணியை அமைக்க ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த பிறகு அவருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் தர மறுத்தனர்.
பாஜகவும் அதற்கு உதவவில்லை. நம்முடைய தலைவருக்கு 6 அடி இடம் தராதவர்களுக்கு தமிழகத்தில் நாம் இடம் தரலாமா” என்று பேசினார்.