பேரழிவிற்கான பயணசீட்டு ராகுல் காந்தி...கடுமையாக விமர்சித்த பாஜக

Rahul Gandhi BJP Narendra Modi India
By Karthick Aug 28, 2023 12:00 PM GMT
Report

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் மக்களைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், அதனை பேரழிவுக்கான பயணச் சீட்டு என்று கார்ட்டூன் வெளியிட்டு பாஜக கேலி செய்திருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல்  

வரும் 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிட காங்கிரஸ் கட்சியும் தற்போதிலிருந்தே பெரும் முயற்சிகளை மேற்கொள்ள துவங்கி விட்டன.

rahul-is-the-disaster-for-india-says-bjp

குறிப்பாக காங்கிரஸ் கட்சி மொத்தமாக 26 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் கூட்டணியை உறுதிப்படுத்தும் செயலில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வரும் மேற்குவங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லியின் ஆம் ஆத்மீ போன்ற கட்சிகளும் கூட்டணி கிட்டத்தட்ட சம்மதித்துள்ள நிலையில், இது பாஜகவிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.  

பாஜக விமர்சனம் 

வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிதரமர் வேட்பாளர் ராகுல் காந்தியே என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் தெரிவித்திருந்தார்.கெலாட்டின் இந்த அறிவிப்பினைத் தெடார்ந்து பாஜக இவ்வாறு கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்திருக்கிறது.

இது குறித்து பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராகுல் காந்தி விமானம் ஒன்றில் பறப்பது போல வரையப்பட்டுள்ளது. அதன் கீழே ‘பிராண்ட் நியூ (ஓல்டு). ஹாட் ஏர் இண்டியா - உங்கள் பேரழிவுக்கான பயணச்சீட்டு’என்று கூறிப்பிடப்பட்டுள்ளது.