"இந்தியாவில் பத்திரிகையாளர்களை மிரட்டுகின்றனர்...’ - லண்டனில் ராகுல்காந்தி பேட்டி

London Rahul Gandhi Viral Video
By Nandhini Mar 05, 2023 07:28 AM GMT
Report

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

லண்டனில் காங்.எம்.பி. ராகுல் காந்தி பேட்டி

லண்டனில் உள்ளஇந்திய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (IJA) நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, இந்தியப் பத்திரிக்கையாளர்கள் சங்கத்துடன் பல்வேறு தலைப்புகளில் சிறந்த முறையில் உரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில்,

‘நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றம், நாடாளுமன்றம், சட்ட அமலாக்கத்துறை அமைப்புகள், ஊடகங்கள் என அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. மக்களின் குரலை பாஜகவினர் அடக்க முயற்சிக்கின்றனர்.

இதற்கான சிறந்த உதாரணம் பிபிசி ஆவணப்படம் மீதான தடை தான். பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள், அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர்.

ஊடகங்கள், நிறுவன கட்டமைப்புகள், நீதித்துறை, பாராளுமன்றம் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன, மேலும் சாதாரண சேனல்கள் மூலம் மக்களின் குரலை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் இந்திய ஒற்றுமை பயணத்தை குறித்த அனுபவங்களை மற்றும் அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொண்டார்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.    

rahul-indian-journalists-association-in-london