ராகுல்காந்தியின் பேச்சு நேருவை போல இருக்கிறது : முதலமைச்சர் ஸ்டாலின்
ராகுல் காந்தியின் பேச்சுக்கள் அரசியல் களத்தை அதிர வைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராகுல் யாத்திரை
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை யாத்திரை தொடங்கி 100வது நாளை கடந்து தற்போது டெல்லியில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில்
அரசியல் களத்தை அதிரவைக்கிறது
ராகுல் காந்தியின் பேச்சுக்கள் அரசியல் களத்தை அதிர வைக்கிறது என கூறினார்.மேலும், ராகுல் காந்தி தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, சித்தாந்த அரசியலை பேச உள்ளார்.
அதனால்தான் அவர் சிலரால் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். சில சமயங்களில் ராகுல்காந்தியின் பேச்சு நேருவை போல இருக்கிறது எனவும் பாராட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.