ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி - காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ராகுல் காந்தி
அமேதியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தனது சமூக வலைதள பக்கத்தில்,
ரேபரேலி தொகுதி
மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி வேட்பாளராகவும், அமேதி தொகுதிக்கு கிஷோரி லால் சர்மா வேட்பாளராகவும் அறிவிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முன்னாள் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியா காந்தி, உ.பி.யின் ரேபரேலியில் கடந்த 2004 முதல் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இம்முறை அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.