ராகுல் காந்தி இவரை திருமணம் செய்ய வேண்டும்.! மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து
நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த அரசாங்கம், “நாம் இருவர், நமக்கு இருவர்” என்பது போல செயல்பட்டு வருகிறது எனக் கூறியிருந்தார். அரசாங்கத்தில் மோடி மற்றும் அமித் ஷா மட்டுமே இருப்பது போலவும் இவர்கள் அம்பானி மற்றும் அதானிக்கே ஆட்சி செய்வதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்வினை ஆற்றியிருந்தனர்.
தனியார் துறையை தாக்குவதை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது என பிரதமரும் பதிலளித்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் ராம் விலாஸ் அத்வாலே ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். அவர், ”ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ல முன்வர வேண்டும். அதுவும் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
இதன்மூலம் மகாத்மா காந்தியின் கனவான சாதி ஒழிப்பை சாத்தியப்படுத்தலாம். மேலும் இளைஞர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும்” என்றுள்ளார்.
ராம்விலாஸ் அத்வாலே இதற்கு முன்னரும் சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது