அமெரிக்கா சென்றடைந்தார் ராகுல் காந்தி!
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்துள்ளார்.
இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் அமோகமான வரவேற்பு நடைபெற்றது.
இதன் பின்னர் ஏப்ரல் 21,22 களில் ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார் ராகுல் காந்தி.
இது தவிர வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்திக்கிறார் மற்றும் வெளிநாட்டுப் பிரிவின் பொறுப்பாளா்களுடனும் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின்போது டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.