கொட்டும் மழையில் நனைந்துக்கொண்டே மேடையில் பேசிய ராகுல்காந்தி - வைரலாகும் வீடியோ

Rahul Gandhi Viral Video
By Nandhini Oct 03, 2022 08:17 AM GMT
Report

கொட்டும் மழையில் நனைந்துக்கொண்டே மேடையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.

கொட்டும் மழையில் நனைந்து பேசிய ராகுல்காந்தி

இந்நிலையில், மைசூருவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நனைத்துக் கொண்டே ராகுல்காந்தி உரையாற்றினார். இது தொடர்பான வீடியோவை ராகுல்காந்தி தன் டுவிட்டரில் பதிவிட்டு, இந்தியாவை இணைக்கும் முயற்சியில் தங்களை எதுவும் தடுக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். ராகுல்காந்தி மழையில் நனைந்தவாறு உரை நிகழ்த்திய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

rahul-gandhi-viral-video