ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து பிரியாணியை சாப்பிட்ட ராகுல்!
youtube
election
politician
By Jon
தமிழகத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, கிராமிய சமையல் குழுவினருடன் சமைத்து சாப்பிடும் வீடியோ வெளியாகி வைரலானது. கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, மதிய உணவு ராகுல் காந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுற்றுப்புறமெங்கும் மரங்களுடன், இயற்கை மண்வாசம் வீச கிராமத்து இளைஞர்களுடன் ஒன்றாக சேர்த்து சமைத்து அசத்தினார் ராகுல். நல்லா இருக்கு... ரொம்ப நல்லா இருக்கு.. என்று சிரமப்பட்டு தமிழில் பேசினாலும், அட ராகுல்காந்தியா இப்படி பேசுறாரு...? என்று சமையல் கலைஞர்களும் அசந்து போனார்கள்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது.