நானும் உங்களோடு உணவு சமைக்கிறேன் - கிராமத்தினருடன் இணைந்து காளான் பிரியாணி செய்த ராகுல் காந்தி!

youtube amazing heart
By Jon Jan 30, 2021 11:22 AM GMT
Report

தமிழகம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரையோடு பிரபல யூடியூப் சேனலோடு சமையலும் செய்து அசத்திய வீடியோ இணைய்த்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழக சுற்றுப் பயணத்தின்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தோட்டத்தில் ராகுலுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், காளான் பிரியாணி தயார் செய்துகொண்டிருந்தனர். 

நானும் உங்களோடு உணவு சமைக்கிறேன் - கிராமத்தினருடன் இணைந்து காளான் பிரியாணி செய்த ராகுல் காந்தி! | Rahul Gandhi Village Cooking 

 மண்மணம் மாறாமல் பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி அங்கே சென்று .சமையல் பணியில் இருந்தவர்களோடு சில வார்த்தைகள் தமிழில் உரையாடினார். பின்னர் அவர்களுடன் ஓலைப் பாயில், அமர்ந்து கிராமத்து சமையல் கலைஞர்களுடன் அமர்ந்து சகஜமாகப் பேசினார் ராகுல், ராகுலுக்கு உணவு சமைத்து கொடுத்த கிராமத்து சமையல் கலைஞர்கள், வில்லேஜ் குக்கிங் சேனல் என்னும் YOUTUBE சேனலை 2 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

தாங்கள் சமைக்கும் உணவுகளை அருகில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு அளித்து பசியாற்றுகின்றனர். அவர்களிடம் என்னென்ன உணவு வகைகள் எல்லாம் சமைப்பீர்கள் என்று கேட்டறிந்த ராகுல் காந்தி, அடுத்தமுறை தமக்கு ஈசல் சமைத்து கொடுக்க வேண்டும் என கூறிவிட்டுச் சென்றார். மேலும் அவர்கள் அமெரிக்கா சென்று சமைக்கத் தேவையான உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்தார்.