"மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்" - சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ராகுல் காந்தி ட்வீட்

congressloseselection 5stateassemblyelection rahulgandhitweet
By Swetha Subash Mar 10, 2022 10:40 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலத்திற்கான தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

"மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்" - சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ராகுல் காந்தி ட்வீட் | Rahul Gandhi Tweets About Congress Defeat

இந்நிலையில், உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

அதேபோல், பாஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட முன்னிலையில் இல்லாமல் கடும பின்னடைவை சந்தித்துள்ளது.

இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து, இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என பதிவிட்டுள்ளார்.