ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

Rahul Gandhi Chennai
By Irumporai Sep 07, 2022 04:44 AM GMT
Report

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

150 நாட்கள் பாதயாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்க உள்ளதையொட்டி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றும் நட்டார். ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மேலும், ராகுல் காந்தி தனது தந்தையின் நினைவிடத்தில் 20 நிமிடங்கள் தியானம் மேற்கொண்ட அவர் காங்கிரஸ் கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். 

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை | Rahul Gandhi Tributes At Rajiv Gandhi Memorial

இந்த நிலையில் ராகுல் தனது ட்விட்டர் பதிவில் வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம். எனக் கூறியுள்ளார்