அந்த எளிமை தானே அவருக்கு வலிமை : லாரியில் பயணித்த ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ

Indian National Congress Rahul Gandhi
By Irumporai May 23, 2023 05:30 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர் ராகுல் காந்தி லாரியில் பயணித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ராகுல் காந்தி

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது . இதனால் ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிபோனது , பதவிபோனாலும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என ராகுல்காந்தி கூறியிருந்தார் .

இந்த நிலையில் ஹரியானா மாநிலம் அம்பாலாவில், லாரி ஓட்டுநர்கள் தங்களின் பணி நேரத்தில் சந்திக்கும் சிரமங்களை கேட்டறியும் வகையில் ராகுல் ஒரு லாரியில் பயணித்துள்ளார். 

அந்த எளிமை தானே அவருக்கு வலிமை : லாரியில் பயணித்த ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ | Rahul Gandhi Traveled In A Truck In Haryana

இதில் முக்கியமான விஷயம் எதுவென்றால் ற்று இரவு திடீரென எந்த திட்டமிடலும் இல்லாமல் ராகுல்காந்தி டெல்லி சண்டிகர் நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்துமிடம் &சாலை ஓர உணவங்களுக்கு சென்றுள்ளார் லாரி டிரைவர்களுடன் பேசிய அவர், லாரியில் கொஞ்ச தூரம் பயணித்திருக்கிறார்போட்டோக்கள் வரும் வரை யாருக்கும் எதுவும் தெரியவில்லை ஆனால் தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.