உடனடியாக காலி பண்ணுங்க ராகுல்காந்திக்கு வந்த நோட்டீஸ் : அதிர்ச்சியில் காங்கிரஸ்
மக்களவை உறுப்பினர் என்ற வகையில் ராகுல் காந்திக்கு அரசு இல்லத்தை உடனடியாக காலி செய நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
ராகுல் எம்பி பதவி நீக்கம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், அவரது எம்பி பதவி நீக்கபட்டதும்தான் தற்போதைய அரசியலில் பேசு பொருளாக உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ்
டெல்லி துக்ளக் சாலை பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் ராகுல் காந்தி தற்போது வசித்து வரும் நிலையில், நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு நீதி வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை பல்வேறு இடங்களில் நடத்தி வருகின்றனர். இந்த சமயத்தில் அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பதட்டத்தை அதிகரித்துள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
