முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழில் நன்றி கூறிய ராகுல் காந்தி

tweet rahul gandhi mk stalin tamil tweet thanks stalin
By Swetha Subash Feb 03, 2022 11:36 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

“உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி” என ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் மக்களவை உரைக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரைக்கு, அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு பாராளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்வீட்டுக்கு, ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், “நம் நாட்டின் மற்ற எல்லா மாநில மக்களைபோன்று, தமிழர்களும் என் சகோதர சகோதரிகளே! உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி திரு மு.க. ஸ்டாலின் அவர்களே!

இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட, கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு யோசனையில் நமது பகிரப்பட்ட நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.