ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி

corona rahul gandhi
By Fathima Apr 20, 2021 10:26 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலை படுவேகமாக பரவி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்பி-யுமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அவரை டுவிட்டர் பக்கத்த்தில் தெரிவித்துள்ளதுடன், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக்கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.