ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த மாதம் தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து வருகிற பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி தேசியக் கட்சித் தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த ஜனவரி 23, 24, 25 தேதிகளில் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்தார். கரூர், அரியலூர், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட பிரசாரத்துக்காக வருகிற பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார்.
அன்றைய தினம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடியும் தமிழகம் வரவிருக்கிறார். ஏற்கனவே அமித் ஷாவும் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.