தன்மனதைப் பற்றி ராகுல் காந்தி பேசுவதா?: ராகுல் காந்தி பேச்சுக்கு குஷ்பு பதிலடி
ராகுல் காந்தி பேச்சுக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார் . தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மானம் உள்ள தமிழர்கள் பலர் காலில் விழமாட்டார்கள் என்று விமர்சித்தார். ராகுல் உண்மை தெரியாமல் பேசி இருப்பார் என்று நினைக்கிறேன். முதலில் அவரது கட்சிக்கு மானம் இருக்கிறதா என்று யோசித்து பார்த்து விட்டு பேச வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழுததை மறந்துவிட்டாரா? கூட்டணி பேசப்போகும் போது தி.மு.க. அவமரியாதை செய்வதாக வேதனைப்பட்டு பேசியது அவருக்கு தெரியவில்லை. அழுதும், கெஞ்சியும், அத்தனை அவமானங்களையும் தாங்கி தானே 25 ‘சீட்’களை வாங்கினார்கள்.
இதன் பிறகும் காங்கிரசுக்கு மானம் இருக்கிறதா?
சிறிதளவேனும் மானம் இருந்து இருந்தால் அழவைத்த தி.மு.க.வோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்று வெளியே வந்திருக்க வேண்டும்.
அப்படி வந்திருந்தால் மரியாதை உள்ள கட்சி, மானம் உள்ள கட்சி என்று மக்கள் பாராட்டி இருப்பார்கள்.