வேளாண் சட்டங்களை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்: ராகுல் காந்தி ஆவேசம்
மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பல கட்ட பேச்ச்ச்வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துருகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள் என மத்திய அரசுக்கு ஆவேசமாக கூறியுள்ளார்.