”முழு ஊரடங்கை கொண்டு வாருங்கள்” - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுரை

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகளும் மரணங்களும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.

உலகில் எங்குமே இல்லாத அளவிற்கு இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாள் பாதிப்புகள் 4 லட்சத்தை கடந்தது. 

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிற நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

அதில், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி முழு ஊரடங்கு அமல்படுத்துவதே ஒன்றே வழி.

இது இந்திய அரசுக்கு புரியவில்லை. மத்திய அரசின் செயலின்மையால் பல அப்பாவி உயிர்கள் பறிபோகி வருகின்றன” என்றுள்ளார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்