நெருக்கடியில் காங்கிரஸ் , ராகுலின் ஒற்றுமைப் பயணம் : பலன் கொடுக்குமா யாத்திரை

Indian National Congress M. K. Stalin Rahul Gandhi DMK
By Irumporai 4 வாரங்கள் முன்

தேசியக்கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதாயாத்திரையினை தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை எனும் பெயரில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்ல உள்ளார்.

ராகுல் பாதயாத்திரை

தமிழகம், கேரளா, கர்நாடக என 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை இந்த பாதயாத்திரை மூலம் கடக்க உள்ளார். 3570 கிமீ தொலைவு பயணிக்க உள்ளார் ராகுல்காந்தி. இந்த பாதயாத்திரை இன்று மாலை கன்னியாகுமரியில் தொடங்க உள்ளது.

காலையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராகுல் காந்தி தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று வணங்கிவிட்டு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி புறப்பட்டிருந்தார்.

தொடங்கி வைத்த முதலமைச்சர்

இந்த நிலையில், அவர் தற்போது கன்னியாகுமரி வந்திறங்கிய நிலையில்  பாதயாத்திரையினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

முன்னதாக ராகுலினை பார்த்த முதலமைச்சர் அவரை கட்டியணைத்து வரவேற்று தேசியக்கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதாயாத்திரையினை தொடங்கி வைத்தார்.


யாத்திரையின் நோக்கம்

கடந்த மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்த 'பாரத் ஜோடோ யாத்திரை' குறித்து அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.

இந்த பயணம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 7 மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பயணம், 150 நாட்கள் தொடர்ந்து நடந்து காஷ்மீரில் நிறைவடைகிறது.

3,570 கி.மீ. தொலைவு செல்லும் இந்தப் பயணம், ஒவ்வொரு நாளும் காலை - மாலை தலா மூன்று மணிநேரம் என 20 கி.மீ தொலைவை கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நெருக்கடியில் காங்கிரஸ் , ராகுலின் ஒற்றுமைப் பயணம்  :  பலன் கொடுக்குமா யாத்திரை | Rahul Gandhi Spotted To Kanniyakumari

12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த நடைபயணம் நடைபெறும். இந்த நடைபயணத்தில் மூன்று விதமான பங்கேற்பாளர்கள் இருப்பார்கள்.

இந்த நடைபயணத்தின் தொடக்கம் முதல் முடியும் வரை கலந்துகொள்ளும் 100 பேர், நடைபயணம் மேற்கொள்ளப்படும் மாநிலத்தைச் சேர்ந்த 100 பேர், எந்தெந்த மாநிலங்கள் வாயிலாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவில்லையோ அந்த மாநிலங்களைச் சேர்ந்த 100 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இப்படி ஒரே சமயத்தில் 300 பேர் இந்த நடைபயணத்தில் உறுதியாக கலந்துகொள்கின்றனர்.

அவர்கள் உறங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் உண்டான வசதிகள் மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய வெவ்வேறு வகையான கண்டெய்னர்களும் இந்த நடைபயணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நெருக்கடியில் காங்கிரஸ் , ராகுலின் ஒற்றுமைப் பயணம்  :  பலன் கொடுக்குமா யாத்திரை | Rahul Gandhi Spotted To Kanniyakumari

'இந்திய ஒற்றுமை பயணம்' என்பதால் தேசியக்கொடியை ஏந்தி இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இடதுசாரி, பொதுவுடைமை அமைப்புகள், காங்கிரஸ் விமர்சகர்கள், பொதுச் சமூகம் என பல்வேறு தரப்புக்கும் இந்த நடைபயணத்தில் பங்கேற்கின்றனர்.

எதற்காக இந்த பயணம்

காங்கிரஸின் தலைவர் யார் என தினசரி யூகங்கள் வெளியாகிவரும் நிலையிலும், 2014-2022 வரை நடைபெற்ற பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்கள் ஆகியவற்றில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தாக்கத்தை ஏற்படுத்துமா

இரண்டு ஆண்டுகளில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. அதற்காக காங்கிரஸ் பக்கம் கவனத்தை ஈர்க்க இத்தகைய பெரிய அளவிலான நடைபயணங்கள் முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில் இரண்டு பயணங்கள் முக்கியமானதாக உள்ளது.

ஒன்று ஜெயப்பிரகாஷ் காந்தி அவசரநிலை காலத்திற்கு பிறகு முன்னெடுத்த நடைபயணம். மற்றொன்று அத்வானியின் ரதயாத்திரை. ஒன்று ஜனநாயகத்திற்கு உதவியாகவும் மற்றொன்று வலதுசாரி அரசியலுக்கு உதவியாகவும் மாறியிருக்கிறது. இரண்டும் முன்னுதாரணமாக இருக்கும்போது ராகுல்காந்தியின் நடைபயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்திமுதல் தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதி வரை அவர்களின் யாத்திரைகள் நடைபயணங்கள் திருப்பத்தை கொடுத்தன அந்த வகையில் இப்போது காங்கிரஸ் கட்சி தன்னை மீட்டெடுக்க ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளும் இந்த 'ஒற்றுமை நடைபயணம்' அக்கட்சிக்கு கைகொடுக்குமா என்பதை வரும் காலம் தான் கூற வேண்டும்