நடந்தது போதும்மா... ஓய்வெடுங்கள்... பாத யாத்திரையில் தாயிடம் பாசம் காட்டிய ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ
நடந்தது போதும்மா... ஓய்வெடுங்கள்... என்று பாத யாத்திரையில் தாயிடம் ராகுல் காந்தி பாசம் காட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி.
ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.

தாயிடம் பாசம் காட்டிய ராகுல்காந்தி
இந்நிலையில், இன்று கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிற கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து கொண்டார்.
அப்போது, தன் தாய் சோனியாகாந்தியிடம் நடந்தது போதும்மா.. சற்று ஓய்வு எடுங்கள் என்று ராகுல்காந்தி பரிவுடன் பேசினார். அப்போது, சோனியாகாந்தி இல்லை... இல்லை... நடக்கிறேன் என்று கூறி நடந்தார்.
#WATCH | Karnataka: Congress interim president Sonia Gandhi joins Congress MP Rahul Gandhi and other party leaders and workers during 'Bharat Jodo Yatra' in Mandya district pic.twitter.com/iSXNW8zciV
— ANI (@ANI) October 6, 2022