பிரதமரே உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லை : கொந்தளித்த ராகுல் காந்தி

Rahul Gandhi Narendra Modi
By Irumporai 1 மாதம் முன்

கர்ப்பிணி பெண் பாலியல் வன் கொடுமை செய்த நபர்கள் விடுதலையான சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோத்ரா சம்பவம்

குஜாராத் மாநிலம் , கோத்ராவில் கடந்த 2022 ம் ஆண்டு பில்கிஸ் பானோ என்ற கர்ப்பிணி பெண் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமரே உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லை : கொந்தளித்த ராகுல் காந்தி | Rahul Gandhi Slams Pm Modi On Bilkis Bano Case

இந்த சமபவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு 2008 ல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது . கடந்த 15 ஆண்டுகளாக 11 பேரும் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் நேற்று தண்டனை காலம் முடியும் முன்பே விடுதலையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி கண்டணம்

இந்த சம்ப்வம் தொடர்பாக எதிர்கட்சியினர் பல்வேறு கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் : ஐந்து மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் விடுதலையாகியுள்ளனர். ஆக பிரதமரே உங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த நாடு முழுவதும் பார்க்கின்றது,என ட்வீட் செய்துள்ளார்.