எப்போதுமே வெள்ளை நிற T-shirt அணிவது ஏன் ? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளை நிற டீ சர்ட் அணிவது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கவிருக்கிறது. அதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தற்போது, மூன்றாம் கட்ட தேர்தல் 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
குறிப்பாக, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், அசாம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றன.
வெள்ளை T-shirt
அந்த வகையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரிடம் ஒருவர் RAPID FIRE கேள்விகள் கேட்கப்படுகிறது.
அப்போது நிபுணர் ராகுல் காந்தியிடம் ஏன் எப்போதும் வெள்ளை டி-சர்டை மட்டும் அணிகிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர்,"வெளிப்படைத்தன்மையும், எளிமையும்தான். உடைகள் குறித்து பெரியளவில் கவனம் செலுத்த மாட்டேன். எளிமையானதாக இருக்க வேண்டும் என நினைப்பேன்" இவ்வாறு கூறிய பின் அவர் அந்த வீடியோவில் ஹெலிகாப்டரில் ஏறிச்செல்வது தெரிகிறது.