விஜய்யுடன் கூட்டணி - போட்டுடைத்த ராகுல்!
விஜய்க்கு காங்கிரஸ் தலைமை மறுப்பு தெரிவித்துள்ளது.
விஜய்யுடன் கூட்டணி
டெல்லியில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் அதில், திமுகவுடன் கூட்டணியை தொடர கார்கே மற்றும் ராகுல்காந்தி உறுதி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
ராகுல் மறுப்பு
அந்த குழுவில் கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் விஜய்- ராகுல் நட்பு பற்றி காங்கிரஸ் தலைவர்கள் கடந்த சில நாட்களாக பேசிவந்தனர்.

இருவரும் கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், விஜய்க்கு காங்கிரஸ் தலைமை மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.