இந்தியாவை மக்கள் அனைவரும் ஆள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் - ராகுல் காந்தி!

Indian National Congress Rahul Gandhi Kerala Lok Sabha Election 2024
By Jiyath Apr 16, 2024 02:21 AM GMT
Report

மக்களின் நம்பிக்கைகள், மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றை காங்கிரஸ் நேசித்து மதிக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி 

கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று ரோடு ஷோ நடத்தி அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ராகுல் காந்தி "இந்தியா என்பது ஒரு பூங்கொத்து போன்றது. அதில் உள்ள ஒவ்வொரு பூவையும் மதிக்கவேண்டும்.

இந்தியாவை மக்கள் அனைவரும் ஆள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் - ராகுல் காந்தி! | Rahul Gandhi Road Show Speech In Kerala

ஏனென்றால் அது முழு பூங்கொத்திற்கும் அழகு சேர்க்கிறது. ஆனால் நாட்டில் ஒரே தலைவர் என்ற கருத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. திணிக்கிறது. இந்தியாவுக்கு ஒரு தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயலாகும்.

நேசித்து மதிக்கிறது

இந்தியாவில் ஏன் பல தலைவர்கள் இருக்க முடியாது? இந்த எண்ணம்தான் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. நாட்டு மக்களின் குரல்களை காங்கிரஸ் கேட்க விரும்புகிறது. மக்களின் நம்பிக்கைகள், மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றை நேசித்து மதிக்கிறது.

இந்தியாவை மக்கள் அனைவரும் ஆள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் - ராகுல் காந்தி! | Rahul Gandhi Road Show Speech In Kerala

ஆனால் பா.ஜ.க.வோ தலைமையிடம் இருந்து எதையாவது திணிக்க விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தால் காலனி ஆவதற்காக நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறவில்லை. இந்தியாவை இந்திய மக்கள் அனைவரும் ஆள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.