‘’ஹொய்யா புது ரூட்டுலதான் , ஹொய்யா நல்ல ரோட்டுல’’ - கோவாவில் பைக்கில் பயணம் செய்த ராகுல் .. வைரல் வீடியோ

election rahulgandhi motorcycle goa
By Irumporai Oct 30, 2021 12:56 PM GMT
Report

கோவா சென்றிருக்கும் ராகுல் காந்தி மோட்டார் பைக்கில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது வியூகங்களை வகுத்த ஆரம்பித்து பிரசாரத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளன.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று (அக்டோபர் 30) கோவா செல்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர் இன்று கோவா சென்றடைந்தார். கோவாவுக்கு சென்ற ராகுல் காந்தி மோட்டார் சைக்கிள் டாக்ஸியில் பயணம் செய்தார். அவர் இந்தப் பயணத்தை பாம்போலிமில் இருந்து பனாஜியில் அமைந்திருக்கும் ஆசாத் மைதானம்வரை மேற்கொண்டார்.

மோட்டார் சைக்கிளில் ராகுல் காந்தி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.