மோடி கோஷம் போட்ட பாஜக தொண்டர்கள்.. "பிளையிங் கிஸ்.." கொடுத்த ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Dec 07, 2022 07:00 AM GMT
Report

பாரத் ஜோடா பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார், கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

ராகுல் நடை பயணம்

இந்த பயணத்தில் ராகுல் காந்தி பல்வேறு மக்களை, குழந்தைகளை சந்தித்து கவனம் பெற்று வருகின்றார்.குறிப்பாக அங்கு உள்ள சிறுவர்களிடம் பேசுவது செல்பி எடுப்பது அவர்களுடன் உரையாடுவது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மோடி கோஷம் போட்ட பாஜக தொண்டர்கள்.. "பிளையிங் கிஸ்.." கொடுத்த ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ | Rahul Gandhi Responses With Flying Kiss Bjp

அந்த வகையில் நேற்று முன் தினம் மத்திய பிரதேசம் வழியாக யாத்திரையில் ராகுல் ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சோயாட் கலான் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாஜகவின் முக்கியத்தலைவர்கள் பிரதமர் மோடி புகைப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.

மேடி கோஷம்

அப்போது அதன் அருகே இருந்த கட்டிடத்தில் நின்று கொண்டிருந்த பாஜக தொண்டர்கள் சிலர் மோடி..மோடி.. என கோஷமிட்டனர். இதனை பார்த்த ராகுல் அவர்களை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்தார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரைக்கு ராஜஸ்தான் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட இன்னும் அங்குக் காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மோடி கோஷம் போட்ட பாஜக தொண்டர்கள்.. "பிளையிங் கிஸ்.." கொடுத்த ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ | Rahul Gandhi Responses With Flying Kiss Bjp