அப்பா... நீங்கள் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறீர்கள்... - ராகுல்காந்தி உருக்கம்

Rahul Gandhi Rajiv Gandhi India Birthday
By Nandhini Aug 20, 2022 10:46 AM GMT
Report

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தன் தந்தையை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ராஜீவ்காந்தி பிறந்தநாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள வீர் பூமியில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். 

rahul-gandhi-rajiv-gandhi-birthday

ராகுல்காந்தியின் உருக்கமான பதிவு

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் தன் அப்பா ராஜீவ்காந்தியை நினைத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன், என் இதயத்தில் இருக்கிறீர்கள். நாட்டுக்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.