முதலமைச்சரின் உங்களில் ஒருவன் நூலை வெளியிட்டார் ராகுல் காந்தி !

rahulgandhi cmstalin bookrelease
By Irumporai Feb 28, 2022 11:27 AM GMT
Report

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி அரங்கிற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகை தந்த நிலையில், பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த விழாவானது கனிமொழி எம்.பி அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்வில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்

மேலும், இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.பிக்கள், திமுக தோழமை கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு உள்ளார்.

உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பிரதியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட, அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொண்டார்.