மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் அப்பா : ராகுல்காந்தி உருக்கம்

Rahul Gandhi
By Irumporai May 21, 2022 04:16 AM GMT
Report

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மனைவி சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தி மரியாதை செலுத்திவருகின்றனர்.

இந்தநிலையில், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மகன் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.

அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர், எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை, அவர் மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தார்.

நான் அவரை மிகவும் பிரிந்து வாடுகிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.