ராகுல் காந்தியிடம் பொய் சொல்லி சர்ச்சைக்குள்ளான புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

girl cyclones cheat
By Jon Feb 19, 2021 02:04 AM GMT
Report

தேர்தல் களம் நெருங்கியுள்ளதால் நேற்று ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்திருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி . டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தார் அங்கு முத்தியால்பேட்டை மீனவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தியிடம் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை கூறினர்.

அப்போது மீனவ சமூகத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தங்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவில்லை. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மீனவ சமுதாய மக்கள் கஷ்டத்தை யாரும் போக்கவில்லை. புயல் பாதிப்பின் போது நாராயணசாமி எங்களை வந்து ஒருமுறைகூட சந்திக்கவில்லை என ராகுல் காந்தியிடம் குறை கூறினார் அந்த மூதாட்டி.

ராகுல் காந்திக்கு தமிழ் தெரியாது என்பதால் அந்த மூதாட்டி என்ன கூறுகிறார் என்பதை முதல்வர் நாராயணசாமி மொழிப்பெயர்த்து கூற சொன்னார். ஆனால் முதல்வர் நாராயணசாமியோ, அவர் புயல் பாதிப்பு குறித்து பேசுகிறார்.நான் அப்போது அவரை வந்து சந்தித்தேன். அதை தான் அவர் சொல்கிறார் என்று மாற்றி தவறாக கூறிவிட்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிய கட்சியில் காங்கிரஸிற்கு எதிராக உள்ள பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் இந்த வீடியோவை பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.