‘’எதையும் நம்மால் சாதிக்க முடியும் ‘’ : படகுப் போட்டியில் பங்கேற்ற ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ!

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Sep 19, 2022 06:12 PM GMT
Report

   காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 8 ஆம் தேதி கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு தொடங்கினார்.

ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்திரை' தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது.

கேரளாவில் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரை' கடந்த 11-நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று 12-வது நாளாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில் இருந்து மீண்டும் 'பாரத் ஜோடோ யாத்திரை'யைத் தொடங்கினார்.

இந்த நிலையில் இன்று அங்குள்ள புன்னமடா ஏரியில் பாரம்பரியமாக நடத்தப்படும் பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்று ராகுல் காந்தி துடுப்புகளை வீசினார். பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்துடன் போட்டியில் பங்கேற்ற ராகுல் காந்தி பலருடன் சேர்ந்து படகை செலுத்தினார்.

இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, "நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரியான நல்லிணக்கத்துடன் செயல்பட்டால், நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை" என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.