ராகுல் காந்தி நடை பயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு

Indian National Congress Rahul Gandhi Sonia Gandhi
By Irumporai 1 மாதம் முன்

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளாவை நிறைவு செய்து விட்டது. தற்போது கர்நாடகத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது.

ராகுல் காந்தி பாதயாத்திரை

தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்த நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவியும், ராகுல்காந்தியின் தாயுமான சோனியா காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைசூர் வந்தடைந்தார்.

ராகுல் காந்தி நடை பயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு | Rahul Gandhi Padayatra Sonia Gandhi Participation

சோனியா பங்கேற்பு

2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று  தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் பாதயாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார்.

மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.