‘’டியர் விராட், உங்களை திட்டும் நபர்களை மன்னியுங்கள்" - கோலிக்கு ராகுல் காந்தி ட்வீட்

rahulgandhi kohli kohlidaughter
By Irumporai Nov 02, 2021 03:12 PM GMT
Report

தற்போது துபாயில் நடைபெற்று வரும்  டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் படுதோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்களை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதில் ,மிக முக்கியமாக  கேப்டன் விராட் கோலியை சமூக வலைத்தளங்களில்  சிலர் வசை பாடி வருகின்றனர்.

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் சிலர் மோசமான வகையில் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ட்வீட் மூலம் ஒரு செய்தியை சொல்லியுள்ளார். “அன்புள்ள விராட், அவர்களிடம் யாரும் அன்பு காட்டாததால் அவர்கள் அனைவரும் வெறுப்புணர்வு நிறைந்தவர்களாக உள்ளனர். அதனால் அவர்களை மன்னியுங்கள் என கூறியுள்ளார்.