நீங்கள் விருப்புவதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும் - ராகுல் காந்தி கலகல!

Indian National Congress Rahul Gandhi India Lok Sabha Election 2024
By Jiyath May 18, 2024 05:56 AM GMT
Report

நீங்கள் கேட்க விருப்புவதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு வரும் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நீங்கள் விருப்புவதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும் - ராகுல் காந்தி கலகல! | Rahul Gandhi Mocks Pm Modi

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி "நரேந்திர மோடி ஜி, உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன். இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.

கவுரவத்தை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி; நான் சொன்னது சரிதான் - பிரதமர் மோடி தாக்கு!

கவுரவத்தை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி; நான் சொன்னது சரிதான் - பிரதமர் மோடி தாக்கு!

என்னால் முடியும்

வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும் taka-tak taka-tak taka-tak... என நான் சொன்னேன். பின்னர் பிரதமர் மோடி அவரது பேச்சில் taka-tak பயன்படுத்தினார். மக்களாகிய நீங்கள் பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புவதை,

நீங்கள் விருப்புவதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும் - ராகுல் காந்தி கலகல! | Rahul Gandhi Mocks Pm Modi

அதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும். அதேபோல் பிரதமர் மோடியிடம் ஏதாவது சொல்ல விரும்பவில்லை என்றாலும், நீங்கள் என்னிடம் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.