லக்கிம்பூர் சம்பவம்: ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ராகுல் காந்தி

1 week ago

லக்கீம்பூர் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திக்கிறார்கள்.  

லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில்  மத்திய அமைச்சர் ஆசிஸ் மிஸ்ராவின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.

அப்போது விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் மனு அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்