மருத்துவமனைக்கு சென்று மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் ராகுல்

Rahul Gandhi aiims Manmohan Singh
By Thahir Oct 14, 2021 01:48 PM GMT
Report

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற அவர், மருத்துவர்களை நேரில் சந்தித்து மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

மருத்துவமனைக்கு சென்று மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் ராகுல் | Rahul Gandhi Manmohan Singh Aiims

மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். மன்மோகன் சிங் உடல் பலவீனமடைந்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மருத்துவமனை சென்று மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.