தடையை மீறி ராகுல் காந்தி பயணம்!! நடக்கப்போவது என்ன?
By Fathima
உத்தரப்பிரதேசத்தில் காரை ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல் காந்திக்கு மாநில அரசு தடைவிதித்துள்ள நிலையில், லக்கிம்பூருக்கு இன்று செல்லவிருக்கிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிய போது, காரை ஏற்றி 4 பேரை கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்தன.
இவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி இன்று லக்கிம்பூர் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்வதற்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில், தடையை மீறாமல் நிச்சயம் லக்கிம்பூர் செல்வோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.