முதியோர் இல்லத்தில் முதியோர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்திய ராகுல் காந்தி
Kerala
Rahul Gandhi
Indian National Congress
By Thahir
மூன்று நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது தொகுதியான வயநாட்டிற்கு வந்துள்ளார்.
அவர் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இந்நிலையில் இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதன் பின்பு மலப்புரம் மாவட்டம் காந்தி பவன் முதியோர் இல்லத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அங்கிருக்கும் முதியோர்களுடன் மதிய உணவை அருந்தினார்.

ராகுல் காந்தி முதியவர்களுடன் உணவருந்திய புகைப்படத்தை அவரது ஆதரவாளர்களும் கட்சியினரும் சமூக வளைதலங்களில் பகிர்ந்து வருகின்றனர்.