விஜய் பதவியேற்கும் நிகழ்வில் ராகுல் காந்திக்கு அழைப்பு

Vijay Rahul Gandhi TVK
By Fathima May 06, 2026 11:49 AM GMT
Report

தவெக தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக.

ஆட்சியமைக்க இன்னும் 11 இடங்கள் தேவையுள்ள நிலையில், காங்கிரசிடம் ஆதரவு கேட்டது தவெக.

விஜய் பதவியேற்கும் நிகழ்வில் ராகுல் காந்திக்கு அழைப்பு | Rahul Gandhi Invited For Vijay Oath Ceremony

தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க தவெக- காங்கிரஸ் கூட்டணி உறுதியானது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விஜய்யை சந்தித்தனர்.

இந்நிலையில் நாளை விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து உரிமை கோரினார் விஜய்.