பிரதமருக்கு நான் பயப்படவில்லை…என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் - ராகுல் காந்தி

Indian National Congress Rahul Gandhi India
By Nandhini Aug 04, 2022 08:53 AM GMT
Report

செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பிரதமருக்கு நான் பயப்படவில்லை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி

2008ம் ஆண்டில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அதே ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.90 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில், 2016ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி 2012ம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

பண மோசடி

அதில், 2011ஆம் ஆண்டு வெறும் ரூ.50 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்ட ‘யங் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற போலி நிறுவனம் மூலம் ரூ.90 கோடி கடன் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடனுக்காக டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ் கட்டடம் உள்பட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

சம்மன்

இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுகுறித்து விசாரணைக்காக சோனியா காந்தி, ராகுல்காந்தி இருவரும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கடந்த ஜூன் 8ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி ராகுல்காந்தி ஜூன் 13ம் தேதி ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 5 நாள்களுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது.

அலுவலகத்திற்கு சீல்

நேற்று டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலம் உள்பட 11 இடங்களில் அமலாக்கதுறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் ஒப்புதல் இல்லாமல் அலுவலகத்தை திறக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி பேட்டி

இந்நிலையில், இன்று இது குறித்து செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், உண்மையை தடை செய்ய முடியாது. பிரதமருக்கு நான் பயப்படவில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாட்டின் நலனுக்காக எப்போதும் பாடுபடுவேன். கவனியுங்கள், புரிந்து கொள்ளுங்கள் என்றார்.