‘பாட்டி... நான் உங்கள் அன்பை என் இதயத்தில் சுமக்கிறேன்...’ - ராகுல் காந்தி உருக்கமான பதிவு
பாட்டி... நான் உங்கள் அன்பை என் இதயத்தில் சுமக்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.
பாட்டியை நினைவுகூர்ந்த ராகுல்காந்தி
இந்நிலையில், தன் டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி வீடியோடு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் தியாகம் இரண்டையும் என் இதயத்தில் சுமக்கிறேன். இந்தியாவுக்காக நீங்கள் சிந்திய ரத்தமும் செய்த உயிர் தியாகமும் வீண்போக விடமாட்டேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
दादी, आपका प्यार और संस्कार दोनों दिल में ले कर चल रहा हूं। जिस भारत के लिए आपने अपना सर्वस्व बलिदान कर दिया, उसे बिखरने नहीं दूंगा। pic.twitter.com/wZ9NSgbFd6
— Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2022

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
