நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர்- மக்களவையில் ராகுல் பேச்சு!
மக்களவையில் நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர்- மக்களவையில் ராகுல் பேசினார். டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் என ராகுல் என மக்களவையில் கூறினார்.
வேளாண் சட்டங்களால் இந்தியாவில் தானிய மார்க்கெட்டுகள் அழிக்கப்பட்டுவிடும் என்று மக்களவையில் ராகுல்காந்தி கூறியுள்ளார். வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் முழுவதையும் நாம் ஆராய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களுக்கு உணவு தானியங்களை விற்கும் விவசாயிகள், நீதி மன்றத்திற்கு செல்வதை வேளாண் சட்டம் தடுப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2வது வேளாண் சட்டம் பொருள் பதுக்கலை ஊக்குவிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் முழுவதையும் நாம் ஆராய் வேண்டும் என கூறினார். இது தேசத்தின் போராட்டம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படும். வேளாண் சட்டங்களால் இந்தியாவில் தானிய மார்க்கெட்டுகள் அழிக்கப்பட்டுவிடும்.
என ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்கள் எதிர்ப்புக்கு காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்தார்.
இருதரப்பும் அவையில் ஆவேசமாக பேசிவருவதால் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது ராகுல்காந்திக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.