பார்ட்டிக்கு போனாரா ராகுல் காந்தி ? - விளக்கம் கொடுத்த காங்கிரஸ்

Indian National Congress
By Irumporai May 03, 2022 07:58 AM GMT
Report

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமல் பார்ட்டி ஒன்றில் ராகுல்காந்தி கலந்து கொண்டதாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.

அதை தொடர்ந்து காங்கிரஸ் சரியான தலைமை இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் கடும் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து, காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேபாளம் நண்பர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க சென்றுள்ளார் என்றும் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இந்தியாவில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை எனவும் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கமளித்தார்.

அந்த திருமண விழாவில் ராகுல் காந்தி நிற்கும் வீடியோதான் இப்படி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.