9 வயது சிறுவனுக்கு ராகுல் காந்தியின் சர்ப்ரைஸ் கிப்ட்- மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது, பாரைக்காடு என்ற இடத்தில் 4ம் வகுப்பு படிக்கும் அந்தோணி பெலிக்ஸ் என்ற மாணவரை சந்தித்தார்.
அருகிலிருக்கும் டீ கடை ஒன்றில் சிறுவனுடன் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தார், தான் ஒரு ஓட்டபந்தய வீரர் என சிறுவன் கூறியதை கேட்டு ஆச்சரியப்பட்ட ராகுல் காந்தி அவனுக்கு சில டிப்ஸ்களையும் வழங்கினார். தொடர்ந்து அந்த சிறுவனுக்கு முறையான ஸ்போர்ட்ஸ் ஷூ இல்லாததும் ராகுலுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிறுவனின் தந்தைக்கு ராகுலின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், சிறுவனின் பாத அளவு குறித்து கேட்டுள்ளனர், இதனையடுத்து சிறுவன் பெலிக்ஸிற்கு புதிய ஷூ ஒன்றை ராகுல் காந்தி கொரியரில் அனுப்பி வைத்தார்.
ராகுலின் பரிசை பார்த்ததும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் பெலிக்ஸின் குடும்பத்தினர், அத்துடன் தன்னை தொடர்பு கொண்ட ராகுல், புதிய ஷூ பிடித்திருக்கிறதா? என கேட்டதாகவும் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.