ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர் - எல்.முருகன் போலீசில் புகார் எதற்காக?

gandhi murugan complain
By Jon Mar 04, 2021 02:23 PM GMT
Report

தமிழகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அப்போது, ராகுல் காந்தி கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ராகுல் காந்தி நடப்பதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், சுதந்திரபோராட்ட வீரர்களை மதிக்காததது போன்ற பல்வேறு குற்றசாட்டை முன்வைத்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறியதற்காக ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கையை பதிய உத்தரவிடக் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதால் வரக்கூடிய பரப்புரைகளில் அவரை அனுமதிக்கக்கூடாது என எல். முருகன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.