ராகுல் பாத யாத்திரை நிறைவு : எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஒற்றுமை நடை பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார்.
ராகுல் நடைபயணம்
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ என்ற ஒற்றுமை பயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது. கடந்த 145 நாட்களாக சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு பாதயாத்திரை மேற்கொண்ட ராகுலின் இந்த நெடும் பயணம், ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.

எதிர்கட்சிகளுக்கு அழைப்பு
இதில் மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் நடைபெறும் நிறைவு விழாவில் கலந்துகொள்ள 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
[
தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தியின் நடை பயண நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.