மோடி குறித்து சர்ச்சை பேச்சு - எம்.பி பதவியிலிருந்து ராகுல் நீக்கம் : அதிர்ச்சியில் காங்கிரஸ்

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Mar 24, 2023 09:09 AM GMT
Report

2 ஆண்டுகள் சிறை தண்டனையை தொடர்ந்து, ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் வழக்கு   

கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதுஎன ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மோடி குறித்து சர்ச்சை பேச்சு - எம்.பி பதவியிலிருந்து ராகுல் நீக்கம் : அதிர்ச்சியில் காங்கிரஸ் | Rahul Gandhi Disqualification Mp Parliment

இந்த வழக்கில் நேற்று, ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் ராகுலுக்கு ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

எம்பி பதவி நீக்கம்

ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.  

இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்ச்சியினையும் பதட்டத்தையும் அதிகமாக்கியுள்ளது.