நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு அழித்து வருகிறது: ராகுல் காந்தி

lockdown ambani indian billionaires
By Jon Jan 29, 2021 02:05 PM GMT
Report

நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு அழித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பது என்பதற்கு சான்றாக பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

கரோனா பொதுமுடக்கத்தின்போது, இந்திய பணக்காரர்களின் வருமானம் 35% அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு பிரச்னை மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ராகுல் காந்தி மத்திய அரசை தீவிரமாக விமர்சித்து வருகிறார்.

ஒரு நாட்டில் 3-4 முதலாளிகளுக்காக அரசை நடத்துவது பிரதமர் மோடியாகத் தான் இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.